பாத்ரூமில் குளித்த கல்லூரி மாணவி.. வீடியோ எடுத்த பிரியாணி கடை ஊழியர் கைது!

 
Chennai

சென்னை ராயபுரம் அருகே இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பிரியாணிக்கடை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (23). இவர், ராயபுரத்தில் உள்ள பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வீட்டின் முதல் தளத்தில் நண்பர்கள் 5 பேருடன் தங்கி உள்ளார்.

video

அதே குடியிருப்பில் 2-ம் தளத்தில் 19 வயதான இளம் பெண் வசித்து வருகிறார். கல்லூரிக்கு சென்று வரும் அந்த பெண்ணை முதல் தளம் வழியாக படியில் சென்று வரும் போதெல்லாம் விக்னேஷ் கண்காணித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மாலை அந்த பெண் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது விக்னேஷ் ஜன்னல் வெண்டிலேட்டர் வழியாக செல்போன் மூலம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்த இளம் பெண் அதிர்ச்சியில் அலறியடித்து குளியல் அறையை விட்டு வெளியே ஓடியுள்ளார். பதறிப்போன பெற்றோர் பெண்ணிடம் விசாரித்தபோது இளைஞர் வீடியோ எடுத்த விவகாரத்தை அழுதபடி கூறியுள்ளார்.

Royapuram Womens PS

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் விக்னேஷை பிடித்த போலீசார் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web