காட்டுக்குப் போக மறுக்கும் குட்டி யானை?
Dec 31, 2024, 09:46 IST
கோவை தடாகம் வனப்பகுதியில் தாய் யானை இறந்த நிலையில் அதன் அருகே குட்டி யானை ஒன்று மீட்கப்பட்டது. அந்த குட்டி யானையை வேறு யானைகளுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்தனர்.
ஆனால் குட்டி யானை காட்டுக்குள் மற்ற யானைகளுடன் செல்ல மறுத்து விட்டது. அதனால் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு குட்டி யானையை அழைத்து வந்தனர். யானைக் குட்டியை பரமாரிக்க சிவா என்ற பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். யானையை பரிசோதித்த மருத்துவர்கள் ஊட்டச்சத்து கொடுத்துள்ளனர்.
காட்டுக்குச் செல்ல மறுத்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் வந்து சேர்ந்த இரண்டாவது குட்டி ஆகும்.