சேட்டை செய்த 3 வயது ஆண் குழந்தை... குச்சியால் அடித்த தாய்... சுய நினைவை இழந்து குழந்தை பலி!! திருத்தணியில் சோகம்!

 
TIRUTTANI

திருத்தணியில், தாய் சரமாரியாக தாக்கியதில், சுய நினைவை இழந்த 3 வயது ஆண் குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (38). லாரி ஓட்டுநரான இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும், மணிகண்டன் (12), சஞ்சனா (6), கிஷோர் (3) என மூன்று குழந்தைகள் உள்ளன.

boy-dead-body

இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி இவர்களின் மூன்றாவது குழந்தையான கிஷோர் வீட்டில் உள்ள படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து உள்ளார். அதன் பிறகும் மறுபடியும் கிஷோர் விளையாட்டாக படியில் ஏறி சேட்டை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தாய் செல்வி குச்சியால் குழந்தை கிஷோரை முதுகில் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் குழந்தை சோர்ந்து சுயநினைவின்றி மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Thiruttani

குழந்தைக்கு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தைக்கு கிஷோர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக திருத்தணி காவல் ஆய்வாளர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web