சடலமாக கண்டெடுக்கப்பட்ட 3 மாத கர்ப்பிணி சிறுமி.. காதலனே கொன்று புதைத்த கொடூரம்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி!!

 
Kanjanur

செஞ்சி அருகே கர்ப்பமாக இருந்த சிறுமி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து உள்ள கஞ்சனூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒரு கால்வாயில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி மாலையில் அந்த பள்ளத்தில் இருந்து ஒரு பெண்ணின் கை மட்டும் வெளியே தெரிந்தது. அந்த வழியாக சென்ற மக்கள், இதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கஞ்சனூர் போலீசார், அந்த பள்ளத்தை மேலும் தோண்டியது. அப்போது, சுமார் 2 அடி ஆழத்திற்கு குழி தோண்டி ஒரு பெண்ணின் உடலை யாரோ புதைத்து இருப்பது தெரிந்தது. மேலும் விக்கிரவாண்டி வருவாய் ஆய்வாளர் ஆதிசக்தி முன்னிலையில் போலீசார் குழியை தோண்டி பெண்ணின் உடலை வெளியே எடுத்து விசாரணை நடத்தினர்.

Kanjanur

போலீசார் விசாரணையில், அந்த பெண்ணை யாரோ கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. மேலும் சுடுகாட்டிற்கு அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதி என்பதால் கொலை நடந்ததும், உடல் புதைக்கப்பட்டதும் யாருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது. தடயவியல் துறையினர் புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடலில் இருந்து சில தடயங்களை சேகரித்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

பிரேத பரிசோதனை முடிவில் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. மேலும் பெண் அணிந்திருந்த மூக்குத்தியில் இருந்த இரண்டு எழுத்துக்களை கொண்டு போலீசார் விசாரனை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட பெண் கண்டமானடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

Kanjanur PS

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சென்னையில் தலைமறைவாக இருந்த அகிலன் மற்றும் சுரேஷை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அகிலனிடம் நடத்திய விசாரணையில், அவர் சில மாதங்களுக்கு முன்பு கண்டமானடிக்கு மேளம் அடிக்க வந்த போது, மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததால் மாணவி 3 மாத கர்ப்பமாகி இருக்கிறார்.

தன்னை திருமணம் செய்துக்கொள்ள வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி மாணவி வீட்டில் இருந்து வெளியேறி அகிலனை பார்க்க வந்துள்ளார். அப்போது அகிலனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள மாணவி மீண்டும் வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த அகிலன் மாணவியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்து தனது நண்பர்கள் இருவரின் உதவியுடன்  குழி தேண்டி புதைத்து விட்டு சென்னைக்கு தப்பி வந்துள்ளார் என்பது தெரிந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web