பெண்கள் கழிவறையில் இளைஞர் சடலம்.. மங்கள் ஏரிபூங்காவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

 
Toilet

முகப்பேரில் உள்ள மங்கள் ஏரி பூங்காவில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி பெண்கள் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் மேற்கில் மங்கள் ஏரி பூங்கா இயங்கி வருகிறது. இந்த பூங்காவில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் ராஜு (31) பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வந்து உள்ளார்.

Mangal-lake-park

இந்த நிலையில் ராஜு அந்த பூங்காவில் உள்ள பெண்கள் கழிவறையில் தூக்கிட்டு தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறை கண்கானிப்பு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நொளம்பூர் போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் ராஜுவின் உடலை கைப்பற்றிய நொளம்பூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நடந்தது கொலையா? தற்கொலையா? என்கிற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nolambur-PS

இந்த பூங்காவில் நாள்தோறும் காலை, மாலை வேளையில் ஆயிரக்கணக்கான மக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் கழிவறையில் கூலித் தொழிலாளி மர்மமான முறையில் உயிர் இழந்து கிடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web