தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 
Admission

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

2022-2023 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று முதல் (செப். 22) தொடங்குகிறது.

நடப்பாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 8,225 இடங்களில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 455 இடங்களும், பல் மருத்துவ படிப்பில் 2,160 இடங்களில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 114 இடங்களிலும் சேர்க்கப்பட உள்ளனர்.

Doctor

தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரியில் 5,050 இடங்களும், கே.கே.நகர் இஎஸ்ஐசி கல்லூரியில் 125 இடங்களும், 20 சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 3,050 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் 848 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 1,290 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பட உள்ளது.

பல் மருத்துவப்படிப்பில் 2 அரசு மருத்துவக்கல்லூரியில் 200 இடங்களும், 20 சுயநிதி பல் மருத்துவக்கல்லூரியில் 1,960 இடங்களும் என 2,160 இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்பட உள்ளது. அவற்றில் 605 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும், 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் அளிக்கப்பட உள்ளது.

Application

நடப்பாண்டு முதல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் முதலாம் ஆண்டில் சேரும் பொழுது கலந்தாய்விலேயே செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி ஆகும். மாணவர்கள் http://tnhealth.tn.gov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்

From around the web