காலையில் பெண்கள்.. மாலையில் ஆண்கள்:  கல்லூரி நேரத்தை மாற்றியமைக்க பரிசீலனை - அமைச்சர் பொன்முடி!!

 
Ponmudi

கல்லூரிகளில் ஷிப்ட் முறையை மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், தமது தொகுதியில் அரசுக் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசுக்கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க அரசு முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண் கல்வியை ஊக்குவிக்க காலையில் மாணவிகளுக்கும், மாலையில் மாணவர்களுக்கும் வகுப்புமுறையை மாற்ற  அரசு பரிசீலித்து வருகிறது என தெரிவித்துள்ளார்

From around the web