எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் சங்கி? ஆ.ராசா ஆவேசம்

 
Raja

சென்னையில் நடந்த திமுக முப்பெருவிழாவில் நான் எதுக்குடா மன்னிப்பு கேட்கணும் என ஆவேசமாக ஆ.ராசா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம். பியுமான ஆ. ராசா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும்” என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Raja

ஆ. ராசாவின் இந்த பேச்சை தமிழ்நாடு பாஜகவினர், இந்து முன்னணியினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். அவருக்கு எதிராக கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் பாஜகவினர் போராட்டம் செய்து வந்தனர். ஆ.ராசாவை கைது செய்ய கோரி காவல் நிலையித்தில் பாஜக மற்றும் இந்து முன்னனி அமைப்பினர்  புகார் மனு கொடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், திமுக இலக்கிய அணி சார்பில் தலைவர் தளபதியின் தீரமிகு மடல்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது.

Raja

அப்போது பேசிய ஆ.ராசா, “யார் தப்பு செய்தாலும் மன்னிப்பு கேட்க வேண்டும், நான் மன்னிப்பு கேட்க தயார், ஆனால் நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் சங்கி? தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி பதவி ஏற்கும்போது என்ன சொல்லி பதவியேற்றார்? அரசியல் சட்டத்தை காப்பாற்றுவேன் என்று கூறினாரே, அதை காப்பாற்றினாரா? அரசியல் சட்டத்தில் சனாதனம் எங்கே இருந்து வந்தது?
 
நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதன தத்துவத்துக்கு தான் எதிரி. அந்த சனாதனத்தை வீழ்த்தாதவரை அரசியல் சட்டம் வாழாது என்று ஆவேசமாக பேசினார்.

From around the web