தாழ்த்தப்பட்ட சாதி எது? வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வியால் சர்ச்சை!!

 
Periyar-university

சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வியால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்றுத்துறை 2-ம் ஆண்டுக்கான தேர்வு நேற்று நடைபெற்ற தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது.

ஒரு கேள்வியில் 4 ஆப்ஷன்களாக சாதிப் பெயர்கள் கொடுக்கப்பட்டு அதில் எந்த சாதி தாழ்த்தப்பட்ட சாதி என இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டபோது, “நேற்று நடைபெற்ற இந்த தேர்வில் கேட்கப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வினாவானது பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அப்பாற்பட்ட பேராசிரியர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினாத்தாள் என்பதால் மாணவர்கள் கைகளுக்கு வினாத்தாள் சென்ற பிறகுதான் இது தொடர்பான விவரங்கள் எங்களுக்கே தெரிய வந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வினாத்தாள் குழுவின் தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அளித்துள்ளார்.

From around the web