எந்தெந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

 
Leave

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
Rain
கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
School-leave
தொடர் மழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனகாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web