அப்பாவை தேடி செல்கிறோம்... தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை!! சாத்தூரில் பயங்கரம்

 
Sattur

கணவரின் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம். ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி சுபா (55). இவர்களுக்கு முரளிராஜ் பாரதி (35) என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். முரளிராஜ் பாரதி படித்து முடித்து வேலை தேடி வந்தார். கடந்த 30 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

Letter

இந்நிலையில், கணவரின் பிரிவை சுபாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக அவர் விரக்தியுடன் காணப்பட்டார். நேற்று சிதம்பரத்தின் 30வது நாள் நினைவு தினத்தை அனுசரித்துவிட்டு துக்கம் தாங்க முடியாமல் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று காலை தாய், மகன் இறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் “நாங்கள் அப்பாவை தேடி செல்கிறோம். நாங்கள் தற்கொலை செய்வதற்கு யாரும் காரணம் இல்லை. அப்பாவுடன் இருந்த நாட்கள் மிகவும் சந்தோசமானவை. யாரும் கவலைபட வேண்டாம். அனைவரும் நீண்ட காலம் நலமுடன் வாழ்க” சுபா கையெழுத்திட்டு எழுதியிருந்தார்.

Sattur

இதே போல் முரளி ராஜ் பாரதியும் ஆங்கிலத்தில் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. அப்பாவின் பிரிவை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். இந்த 2 கடிதங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web