நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி!!

 
duraimurgan

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன், கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார்.

இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Duraimurgan

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது குறித்த மருத்துவமனை அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் 1971-ம் ஆண்டு முதல் மாநில சட்டமன்ற தேர்தலில் இதுவரை சென்னை காட்பாடி தொகுதியில் 12 முறை போட்டியிட்டு 10 முறை வெற்றிபெற்று 10 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web