வேதாரண்யத்தில் தனியார் பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்!! மருத்துவமனையில் அனுமதி!

 
Nagai

வேதாரண்யத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவிகள் தங்கி படிப்பதற்காக விடுதி ஒன்று உள்ளது.

vomit

இந்த விடுதியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான 190 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை விடுதியில காலை உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவிகளை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவல் அறிந்து மாணவிகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

vedharaniyam

அப்போது விடுதியில் மாணவிகள் சாப்பிட்ட கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக பல்லி இருந்ததாக மாணவிகள் புகார் அளித்தாக தெரிகிறது. இந்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web