பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதா நிறைவேற்றம்: அதிமுக, பாஜக வெளிநடப்பு

 
ADMK-BJP-Stage-Walkout-Form-TN-Assembly-in-University

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார்.

இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை, இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.

மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உடன் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதேவேளை, பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற அதிமுக பல்கலைக்கழக துணை வேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அறிவித்தது. அதன்பின்னர், காங்கிரஸ், அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

From around the web