3,552 பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் தேர்வு
Thu, 28 Jul 2022

தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான 2-ம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 30-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு (Common Recruitment) விண்ணப்ப செயமுறை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 3552
மொத்த காலிப்பணியிடங்களில் 10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் என்றும், பெண்களுக்குரிய பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு (Destitute Widow) ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த ஆட்சேர்ப்பில் துணை ராணுவப்படை வீரர்களுக்கு அளித்து வந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியுள்ளது.