12-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!!

 
tirupur

நடை, உடை, பாவனை என எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக இருந்து இரட்டையர்கள் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரியாக ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 218 பள்ளிகளை சேர்ந்த 24,395 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இதில், 23,559 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் மொத்தம் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் திருப்பூரை சேர்ந்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர்.

school-ids

திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜ் என்பவருக்கு ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் இரட்டை பிறவிகள். இரு மகன்களும் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டையர்களான ரோகித், ரோசன் இருவரும் எடுத்த மதிப்பெண்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இருவரும் 600-க்கு 417 மதிப்பெண்கள் எடுத்து மதிப்பெண்கள் எடுப்பதில்கூட தங்கள் ஒற்றுமையை காட்டியுள்ளனர்.

marks

நடை, உடை, பாவனை என எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக இருந்து இரட்டையர்கள் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி மதிப்பெண்தான் எடுப்போம் என்று ரோகித் ராஜா மற்றும் ரோஷன் இருவரும் 417 மதிப்பெண் எடுத்த சம்பவம் பள்ளியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

From around the web