அண்ணாநகரில் சோகம்! பால் குடித்துவிட்டு தூங்கிய மூன்றரை வயது மூச்சு திணறி பலி!!

 
Milk

சென்னை அண்ணாநகர் சத்தியசாய் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் எழிலரசன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு, சௌமியா என்ற மனைவியும், மூன்றரை வயதில் தேஜி என்ற குழந்தையும் உள்ளனர்.

baby

நேற்று மதியம் சௌமியா குழந்தை தேஜ்க்கு பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின்னர் சௌமியா வழக்கம் போல்வீட்டு வேலை செய்து முடித்துவிட்டு மாலை குழந்தையை வந்து பார்க்கும் போது மெத்தையில் குழந்தை அசைவின்றி இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சௌமியா, உடனே குழந்தை தேஜ்சை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் அண்ணாநகர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

anna-nagar

முதற்கட்ட விசாரணையில் சௌமியா குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு சென்ற பின்னர் குழந்தை தேஜ் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இருப்பினும் குழந்தையின் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பால் குடித்துவிட்டு தூங்கிய மூன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறலால் பலியான சோக சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web