கள்ளக்காதலால் விபரீதம்... 2 வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாயின் ஆண் நண்பர்..!

 
Arni

ஆரணி அருகே கள்ளக்காதலால் 2 வயது குழந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயசுதா (27). இவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில், அதே மருத்துவமனையில் சென்னையை சேர்ந்த குணசேகரன் என்பவர் எலக்ட்ரீஷனாக பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

இதில் ஜெயசுதா கருவுற்ற நிலையில் குணசேகரன் ஜெயசுதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தாய் வீடான சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்திற்கு ஜெயசுதா வந்தார். பின்னர் ஜெயசுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையான ஏனோக்ராஜ்னுடன் தனியாக வாழ்ந்து வந்தார். 

2-year-boy

அப்போது ஜெயசுதாவின் உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மாணிக்கம் தன்னுடைய குடும்பத்தினரை கைகழுவி விட்டு கள்ளக்காதலியான ஜெயசுதாவுடன வாழ்ந்து வந்தார். மற்றும் ஜெயசுதாவின் குழந்தையுடன் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார். 

மாணிக்கம் தினந்தோறும் மது குடித்து விட்டு ஜெயசுதாவிடம் உன் குழந்தை எனக்கு பிறக்கவில்லை உன் முதல் கணவர் குணசேகரனுக்கு பிறந்தது என்று தினந்தோறும் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை தாக்கியும் கொடுமைபடுத்தியும் சூடு வைத்தும் தண்ணீர் தொட்டில் 2 கால்களை பிடித்து மூழ்கடித்து மற்றும் கட்டையால் தாக்கியும் கொடூரமான முறையில் கொடுமைபடுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

Arni

மேலும் கடந்த மாதம் 21-ம் தேதி மேஸ்திரி மாணிக்கம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு ஜெயசுதாவிடம் வாக்குவாதம் செய்தார். ஆத்திரத்தில் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

இந்த சம்பவம் குறித்து ஜெயசுதா ஆரணி தாலுகா காவல் நிலையித்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web