ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம்... மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு இளைஞர் விபரீத முடிவு..!

 
Dharmapuri

தர்ம்புரி அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பிரபு என்ற இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள முத்தானூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பிரபு. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். தனியார் கிரானைட் கம்பெனியில் பணிபுரிந்து வந்த இவர், பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம்காட்டி அதற்கு அடிமையாகியுள்ளார். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்துள்ளார்.

Rummy

முதலில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த பிரபு, விட்டதை பிடிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்துள்ளார். இதனால் அவர் ரூ.15 லட்சம் வரை ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேரளா லாட்டரியை நம்பியும் அவர் ரூ.3 லட்சம் வரை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் அவர் ரூ.18 லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது.

கடன் சுமை அதிகமானதால் தான் குடியிருந்த வீட்டை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து குடியிருக்கும் வீட்டை விற்பதற்கு முன்தொகை பெற்று, அதையும் ஆன்லைன் கேம் விளையாடி இழந்து ஏமாற்றம் அடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில், அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

dead

ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் இதுவரை 10-க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆன்லைன் ரம்மியால் ரூ. 20 லட்சம் வரை இழந்த கோவை காவலர் காளிமுத்து கடந்த 15-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வருவது வேதனையான ஒன்றாக உள்ளது.

From around the web