தொடரும் சோகம்... கிணற்றில் குதித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

 
Goutami

மேட்டுப்பாளையம் அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள காரமடை வெள்ளியங்காடு பூமாதேவி நகர் பகுதியில் வசித்து வருபவர் நித்யா (30). இவருக்கும் இவரது தாய்மாமா செந்திலுக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கெளதமி (14) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் செந்தில் இறந்துவிட்டதால் வெள்ளியங்காட்டை சேர்ந்த கோபிநாத் என்பவரை நித்யா 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரோகித் என்ற மகன் உள்ளார்.

well-suicide

இந்த நிலையில் நித்யாவின் முதல் கணவர் செந்திலின் பெற்றோர், பேத்தி கெளதமியை வளர்த்து வந்துள்ளனர். கௌதமி வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தாண்டு துவக்கத்தில் தாத்தா, பாட்டி இருவரும் இறந்துவிட கெளதமி மன உளைச்சலில் புலம்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று நித்யா, அவரது 2வது கணவர் கோபிநாத், கெளதமி ஆகிய மூவரும் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் கோபிநாத் வெளியில் சென்று விட தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து சென்ற கெளதமி தோட்டத்து கிணற்றில் திடீரென குதித்து விட்டார்.

Karamadai-PS

இது குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் போலீசார், கெளதமியை சடலமாக மீட்டனர்.  பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செயத போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web