சோகம்! சேலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!!

 
NIrmal-kumar

சேலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் அருள்மணிகுமார். இவரது மகன் நிர்மல் குமார் (25). இவர் சேலம் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி 2-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் ஊருக்கு சென்று வர முடியாது என்பதால், கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி படித்து வந்தார். 

நிர்மல்குமாரை, தினமும் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார். அதுபோல் நேற்று முன்தினம் காலையில் இருந்து நிர்மல்குமாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அவரது நண்பர் ஜெயபிரகாஷ் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பெற்றோர் தங்களது மகன் செல்போன் எடுக்காமல் இருப்பது பற்றி தெரிவித்தனர்.

Suicide

இதையடுத்து நிர்மல்குமார் தங்கி இருந்த அறைக்கு சென்று நண்பர் ஜெயபிரகாஷ் பார்த்துள்ளார். அப்போது அறை கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அறை கதவை திறக்குமாறு கூறி வெகுநேரமாக நண்பர் கதவை தட்டினர். ஆனால் நிர்மல்குமார் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு நிர்மல்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயபிரகாஷ் உடனடியாக நிர்மல் குமார் பெற்றோருக்கும், ஆட்டையாம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆட்டையாம்பட்டி போலீசார், நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Attayampatti

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நிர்மல் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சக மாணவ-மாணவிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web