சோகம்!! தாய் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

 
varun

தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவேற்காட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தரசோழபுரம் செல்லியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண் (20). இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வருண், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Varun-mother

தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த வருணை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, திருவேற்காடு போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வருண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்ட விசாரணையில், வருணின் தாய் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வருண் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

thiruverkadu

மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web