இன்று இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
Ariyalur

மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர்  விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

Rajendra-cholan

அந்த வகையில், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புஅருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம்  கட்டப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் தமிழ்நாடு அரசு  அறிவித்திருந்தது.

Local-holiday

இந்நிலையில் 26-ம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு,அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

From around the web