இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

 
leave

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று (ஜன. 2) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. தற்போது பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. 
இதையொட்டி ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (ஜன. 2) அதிகாலை 4.45 மணிக்கு நடக்கிறது.
Srirangam
கொரோனா பரவல் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்கள் அதிக அளவில் வரவில்லை. இதனால் இன்று நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் நம்பெருமாளை தரிசிக்க தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று (ஜன. 2) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Srirangam
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அண்மையில் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபதவாசல் திறப்பு) நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திற்கு 02.01.2023 (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். வைகுண்ட ஏகாதசி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, வருகின்ற (07.01.2023) (சனிக்கிழமை) அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வேலை நாளாக செயல்படும்" என்று தெரிவித்துள்ளார்.

From around the web