இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு - தமிழ்நாடு முழுவதும் 22 லட்சம் பேர் எழுதிகின்றனர்

 
Arear-exam-conduct-on-online

தமிழ்நாடு அரசின் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு  இடங்களில் 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. இதற்காக டிஎன்பிஎஸ்சி விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதில் ஆண்கள் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர், பெண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.

TNPSC

சென்னையில் 503 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். இந்த தேர்வில் மொத்தம் 534 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணிகள் ஈடுபட உள்ளனர்.

தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும். 8.59 மணிக்கு மேல் வருவோர் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல, தேர்வு முடிந்தபின் 12.45 மணி வரை தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும்.

ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உட்பட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். கொரோனா பரவலால், தேர்வு மைய வளாகத்தில் தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பன உட்பட, ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Bus

குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்படி, தேர்வு மையங்களின் எண்ணிக்கை ஏற்ப இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

From around the web