திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

 
Thiruvallur

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1-ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த விருது வழங்கும் விழா தொடங்கியது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின்னர், அவர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இதில் அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மா.சுப்ரமணியன் கலந்துகொண்டனர்.

TN-govt

2023-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமி அவர்களுக்கும், 2022-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது திரு. உபயதுல்லா அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது வாலாஜா திரு. வல்லவன் அவர்களுக்கும்,தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது எழுத்தாளர் நாமக்கல் திரு.பொ.வேல்சாமி அவர்களுக்கும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது திராவிடர் கழக துணைத் தலைவர்கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.


அண்ணல் அம்பேத்கர் விருது திரு.எஸ்.வி. ராஜதுரை மற்றும் தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. மேலும் வள்ளலார் பல்லுயிர்க் காப்பகம் எனும் புதிய திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

From around the web