திருவள்ளூர் பள்ளி மாணவியின் உடற்கூராய்வு தொடக்கம்!! 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

 
Tiruvallur

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு சரளா (17) என்ற மகள் உள்ளார். இவர் திருவள்ளூவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை அந்த மாணவி வழக்கம்போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்ட நிலையில், தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tiruvallur

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே பள்ளி நிர்வாகம் முறையான தகவல்களை அளிக்க வில்லை என்று கூறி, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலர், பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தினர்.பதற்றத்தை தவிர்க்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tiruvallur

இந்நிலையில் கீழச்சேரி பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. உடற்கூறு ஆய்வின்போது சிபிசிஐடி அதிகாரிகளும் உடன் உள்ளனர். அண்ணன் சரவணன் முன்னிலையில் மாணவியின் பரிசோதனை பிரேத பரிசோதனை நடப்பதையொட்டி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவி உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடியிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

From around the web