ஆளுநர் உரையில் மிஸ்ஸான ‘திராவிட மாடல்’ வார்த்தை... முதல்வர் பேசிக் கொண்டிருந்த போதே வெளியேறிய ஆளுநர்!!

 
RN Ravi

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் சில குறிப்பிட்ட வார்த்தைகளைத் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டபேரவையின் நடப்புண்டு முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டபேரவையில் ஆளுநர் தனது உரையைத் தொடங்கும் போதே, அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தார்.

MKS

என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என்று ஆளுநர் ரவி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், அவர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளையும் ஓரிரு வரிகளையும் தவிர்த்துவிட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாகத் ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்துள்ளார்.

‘தமிழ்நாடு அரசு’ என்ற வார்த்தை தவிர்த்து இந்த அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். அதேபோல பெரியார், அண்ணா, கருணாநிதி என்ற பத்தியை அவர் படிக்கவில்லை. ஆளுநர் தாமாக முன்வந்து பேசிய வார்த்தைகளை அக்குறிப்பில் பதிவேற்றக்கூடாது என்றும் அவைக் குறிப்பில் அரசு தயாரித்துக் கொடுத்த உரை மட்டுமே இடம் பெறும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும், இது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ரவி சட்டபேரவையில் இருந்து வெளியேறினார். இதனால் சட்டபேரவையில் பரபரப்பு நிலவியது.

From around the web