விருத்தாசலத்தில் நடந்த சோகம்! இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!!

 
Virudhachalam

விருத்தாசலத்தில் மகன் மகளை கொலை செய்துவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார் (51). இவர் சொந்தமாக லாரி மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கரூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஷகீரா பானு (40) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் பரத் (13), மகள் மேகவர்ஷினி (8), இருவரும் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

Virudhachalam

நேற்று முன்தினம் வழக்கம்போல் அனைவரும் வீட்டில் உறங்கி இருக்கிறார். குமார் வீட்டில் உள்ள கூடத்தில் படுத்து உறங்கி உள்ளார். அவரது மனைவி ஷகீரா பானு மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் அறைக்குள் படுத்து தூங்கி உள்ளனர். இந்த நிலையில் காலை வெகு நேரமாகியும் மனைவியும் குழந்தைகளும் அறையிலிருந்து வெளியே வரவில்லை.

இந்நிலையில், நேற்று காலை அறையின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூவரும் தூக்கில் சடலமாக தொங்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

virudhachalam

மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குமார் மற்றும் அவரது மனைவி சகீராபானுக்கு இடையே, கடந்த மூன்று மாதங்களாக பிரச்சனை இருந்து வந்ததது தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த ஷகீரா பானு, தனது மகன் மற்றும் மகளின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்து, மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டதாகவும், அதன் பின்னர் சகீரா பானுவும் மின்விசிறியில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மகன் மகளை கொலை செய்துவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

From around the web