தொடரும் சோகம்!! பரங்கிப்பேட்டை அருகே 12ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!!

 
Cuddalore

பரங்கிப்பேட்டை அருகே 12ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பரங்கிப்பேட்டை அகரம் பெரியகோவில் தெருவில் வசித்து வருபவர் ரத்தினம். கட்டிட தொழிலாளியான இவருக்கு ருத்ராதேவி(17) என்ற மகள் உள்ளார். இவர் ஆண்டாள் முள்ளிபள்ளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

suicide

இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி ருத்ராதேவிக்கு நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவில் ரத்தினத்துக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையே தகராறு தொடர்ந்ததால், மனம் உடைந்த ருத்ராதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே வெளியே சென்றிருந்த கணவனும் மனைவியும், வீட்டுக்கு வந்த போது தங்களது மகள், தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவி ருத்ராதேவியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ருத்ராதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Parangipettai

பின்னர் இந்த சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web