ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது தவறி விழுந்த வாலிபர்.. 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!

 
Bharath

புழல் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது தவறி விழுந்த வாலிபர் 3 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார் (23). இவர் சென்னை அடுத்த மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 12-ம் தேதி நண்பர்களுடன் ஆலமரம் பகுதியில் உள்ள புழல் ஏரியில் மீன் பிடிக்க சென்றார். 

water

அப்போது ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, கால் இடறி ஏரியில் தவறி விழுந்து விட்டார். அப்போது அவரை காப்பாற்ற முயன்றும் முடியாததால் அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் செங்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு போலீசார் ஏரியில் இறங்கி பரத்குமார் உடலை தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக உடலை தேடி வந்த தீயணைப்பு துறையினர், நேற்று மாலை அம்பத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட புழல் ஏரியில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். 

Ambattur

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web