விரட்டும் கருப்பு உருவம்... பள்ளி மாடியில் இருந்து குதித்த 11-ம் வகுப்பு மாணவி!! தூத்துக்குடியில் பரபரப்பு

 
Sawyerpuram

தூத்துக்குடி அருகே பள்ளியின் முதல் மாடியில் இருந்து 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் குதித்து கால்களை முறித்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் தூயமேரி மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு விடுதி வசதியும் உள்ளது. அந்த விடுதியில் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் தங்கி படித்து வந்த நிலையில் அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதமாக தினமும் வீட்டில் இருந்து, பள்ளிக்கு போகும்படி கூறியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று காலையில் சக மாணவிகளுடன் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த அந்த மாணவி மட்டும், பள்ளியின் முதல் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதனால், மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆட்டோவில் ஏற்றி ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவியின் இரு கால்களிலும் எலும்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Girl

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக, நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த மாணவிக்கு இரு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது தொடர்பாக சாயர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவிவும், அவரது தந்தை அளித்த தகவல், போலீசாருக்கு தூக்கி வாரிப்போட்டது.

கடந்த ஒரு மாதமாகவே ஒரு கருப்பு உருவம் தன்னை பின் தொடர்வதாக தங்கள் மகள் கூறி வந்ததாகவும், நேரில் சென்று பார்த்த போது அவருடன் எவரும் இல்லை என்பது தெரியவந்ததாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவியிடம் விசாரித்த போது, சம்பவத்தன்று அந்த கருப்பு உருவம் தன்னுடன் விளையாடியதாகவும், தன்னை தனியாக பள்ளியின் மாடிக்கு அழைத்துச்சென்ற அந்த உருவம் இருவரும் சேர்ந்து குதித்து விளையாடலாம் என்று கூறியதால் அதன் பேச்சை கேட்டு தான் மாடியில் இருந்து குதித்ததாகவும், கீழே விழுந்த பின்னர் மேலே பார்த்தால் அந்த கருப்பு உருவம் குதிக்காமல் தன்னை ஏமாற்றி விட்டது என்றும் கூறி போலீசாருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

Sawyerpuram

போலீசார் மாணவியிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அங்க பாருங்க அந்த உருவம் தான்...! ஜன்னல் கிட்ட இருந்து என்ன கூப்பிடுது பாருங்க..! என்று திகிலூட்டி இருக்கிறாள். அதே சம்யம் யாரும் புகார் அளிக்காததால் என்ன பிரிவில் வழக்கு பதிவு செய்வது என்று போலீசார் குழம்பி உள்ளனர். தகவல் அறிந்து சென்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி நேரடியாக அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டார். அவரிடமும் அந்த மாணவி, தன்னை விரட்டும் கருப்பு உருவக்கதையை தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு முயன்றதாக 309 வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த மாணவியின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மனோ தத்துவ நிபுணர் மூலம் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார். அதே நேரத்தில் பள்ளியில் கருப்பு உருவம் சுற்றுவதாக மாணவி தெரிவித்த சம்பவம் அப்பள்ளி மாணவிகளிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web