அடுத்தவர் மொழியை பழிப்பது நமது கலாச்சாரத்திற்கு அழகு அல்ல - தமிழசை சௌந்தரராஜன்

 
Tamilisai-attend-marriage-function

இந்தி மொழியை படிக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழகத்தை பொறுத்தவரை இந்தி மொழியை விருப்பப்பட்டால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தி மொழியை படிக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நமது மொழியை பாராட்டும் அதே வேளையில் அடுத்தவர் மொழியை பழிப்பது நமது கலாச்சாரத்திற்கு அழகு அல்ல. மக்களுக்கான பெயர் பலகை கூட தமிழில் தான் உள்ளது என குறிப்பிட்டார்.

மேலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே ஆன்மீக தமிழ் உள்ளது. ஆன்மிகத்தை விடுத்து தமிழ் கிடையாது எனவும். தமிழின் பெருமையை இளைஞர்கள் உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு இன்னொரு மொழியை படிப்பதால் அது பயனுள்ளதாக அமையும் என்று கூறினார்.

From around the web