குடிக்க பணம் தர மறுத்த தாய்... ஆத்திரத்தில் குழவி கல்லை போட்டு கொன்ற பாசகார மகன்!!

 
Vikravandi

விழுப்புரம் அருகே மதுவெறியில் பெற்ற தாயை மகன் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்து உள்ள எஸ்.எஸ்.ஆர் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் பாஞ்சாலி (65). இவரது மகன் விஜயகுமார் (40). இவர் கூலித் தொழிலாளியான மகன் விஜயகுமாருடன் வசித்து வந்துள்ளார். குடிபழக்கத்திற்கு அடிமையான இவர், குடிக்க பணம் இல்லையெனில், தனது தாயிடம் தகராறு செய்து அவரிடமிருக்கும் பணத்தை பிடுங்கிச் சென்று மது அருந்துவது வழக்கம்.

Alcohol

இந்த நிலையில் நேற்று மாலை தாய் பாஞ்சாலியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டு விஜயகுமார் சண்டையிட்டிருக்கிறார். தாய் பாஞ்சாலியோ, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், தனது தாயை பலமாக தாக்கிதோடு அருகிலிருந்த அம்மி குழவி கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட பாஞ்சாலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

Vikravandi

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விஜயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web