தேர்வு எழுத செல்லுமாறு வற்புறுத்திய தாய்.. 11-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

 
Chennai

சென்னையில் தேர்வு எழுத செல்லுமாறு தாய் திட்டியதால் மனம் உடைந்த 11-ம் வகுப்பு மாணவன் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகர் டாக்டர் தாமஸ் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுமி (47). இவரின் கணவர் ராஜா. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆன்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால் சுமி தனது மகன் ஹரிஷ் (15) உடன் வசித்து வருகிறார். ஹரிஷ் கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

Royapettah

இந்த நிலையில், நேற்று காலை தூங்கிக் கொண்டு இருந்த ஹரிஷை, அன்றைய நாளில் பள்ளியில் தேர்வு இருக்கிறது என அறிவுறுத்திய தாய் பள்ளிக்கு விரைந்து கிளம்ப வற்பறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். மகன் சில நிமிடங்களில் வருவான் என தாயும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், மாடிக்கு சென்ற ஹரிஷ் 3வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

TNagar

இது குறித்து தகவல் அறிந்த மாம்பலம் போலீசார், ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு எழுத செல்லுமாறு தாய் கண்டித்ததால் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web