கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி ... காதலி உடல் சிதறி பலி.. காதலன் கவலைக்கிடம் 

 
Mount station

சென்னையில் புறநகர் ரயில் முன்பு பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை செய்ய முயற்சித்ததில் காதலி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து நேற்று இரவு தாம்பரம் நோக்கி மின்சார ரயில் சென்றது. 8.15 மணியளவில், தாம்பரம் நோக்கி மின்சார ரயில் சென்றது. அப்போது காதல்ஜோடி ஒன்று கட்டிப்பிடித்தபடி நிலையில், ரயில் முன்பு பாய்ந்தனர். 
இதில் இளம் பெண் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காதலன் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினர். 
Chennai
தகவல் அறிந்து மாம்பலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காதலனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் இருவரின் செல்போன்களை எடுத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கி காரணத்தினால் இருவரின் செல்போன்களும் நொறுங்கி உள்ளதால், போலீசார் விசாரணையை முடக்கி உள்ளனர். 
Mount station
பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் பெயர் இளங்கோ என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உயிரிழந்த காதல் ஜோடிகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

From around the web