காதல் திருமணம் செய்த மகள்... பேத்தியை பார்க்க வராத தாத்தா பாட்டி... விரக்தியில் மகள் எடுத்த விபரீத முடிவு!

 
Salem

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் 3 ஆண்டுகளாக தாய், தந்தை பார்க்க வராத விரக்தியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் அருண். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் கௌசல்யாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே அருண் கௌசல்யா தம்பதிக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

suicide

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தாய், தந்தையை பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா தனக்கு குழந்தை பிறந்த நிலையிலும் கூட தாய் தந்தை வந்து பார்க்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருந்த நிலையில், அருண் வேலைக்கு சென்றுவிட்டதால் தனியாக இருந்த கௌசல்யா தன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது கௌசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக கௌசல்யாவின் கணவர் அருணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர்  காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் கௌசல்யாவின் சடலத்தை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Poolampatty PS

இதனைத்தொடர்ந்து அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கௌசல்யாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தாய். தந்தை பார்க்க வராத விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web