ஆற்றில் குளித்த மூதாட்டியின் காலை கடித்த முதலை..! அச்சத்தில் மக்கள்!!

 
Crocodile-bite-old-woman-leg

அணைக்கரை அருகே ஆற்றில் குளித்த மூதாட்டியை முதலை கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அணைக்கரை அருகே கீழமணக்குண்ணம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பானுமதி என்ற 62 வயது மூதாட்டி மாலையில் கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளார்.

அப்போது ஆற்றில் இருந்த முதலை கடித்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

From around the web