பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை! சென்னையில் பரபரப்பு

 
police

மதுரை மாவட்டம் செல்லூர் சுயராஜ்ய புரத்தைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி ஜெயந்தி மாலா. இவர்களது மகன் செந்தில்குமார் (32). இவருக்கு திருமணமாகி உமா தேவி என்கிற மனைவியும், ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் கடந்த, 2011-ம் ஆண்டு முதல் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். தற்போது எக்மோர் கெங்கு சாலையில் வசித்து வந்துள்ளார்.

ஆயுதப்படை காவலரான செந்தில்குமார் நேற்று வழக்கம் போல, தனக்கு ஒதுக்கப்பட்ட நேரு உள்விளையாட்டு அரங்க பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளார். கடந்த 13-ம் தேதி முதல் முக்கிய விஐபிகள் வரும் பகுதியில் பாதுகாப்பு பணியில் செந்தில்குமார் ஈடுபட்டு வந்துள்ளார்.

chennai

இந்த நிலையில் நன்பகல் 12 மணியளவில் உள்விளையாட்டு அரங்கில் உள்ள கழிவறை பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சக காவலர்கள், கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, காவலர் செந்தில்குமார், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வலதுபுற நெஞ்சில் தான் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டது தெரியவந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்தில்குமாரை, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, கொண்ட செல்லப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு ஆயுதப்படை துணை ஆணையர் சௌந்தரராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். செந்தில்குமார் பயன்படுத்திய துப்பாக்கியை பரிசோதித்த போலீசார் அவர் ஒருமுறை மட்டும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளது கண்டுபிடித்தனர். மீதமுள்ள ஐந்து குண்டுகளை துப்பாக்கியிலிருந்து மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மரணமடைந்த காவலர் செந்தில்குமாருக்கும் அவரது மனைவி உமாதேவிக்கும் அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்துள்ளது. இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருவரிடமும் சமாதானமாக பேசி ஒன்று சேர்த்து வைத்தனர். அமைதியாக வாழ்ந்த இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

gunshot

மரணமடைந்த காவலர் செந்தில்குமாருக்கும் அவரது மனைவி உமாதேவிக்கும் அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்துள்ளது. இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருவரிடமும் சமாதானமாக பேசி ஒன்று சேர்த்து வைத்தனர். அமைதியாக வாழ்ந்த இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, செந்தில்குமார் பயன்படுத்திய செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கலாமா ? என்கிற அடிப்படையிலையும் விசாரணை நடைபெறுவதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்டின் இறுதி நிகழ்ச்சிக்காக அரங்கில் ஏற்பாடு நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web