திடீரென உள்வாங்கிய கடல் நீர்.. வெளியே வந்த நந்தி சிலை! திருச்செந்தூரில் நடந்த அதிசயம்

 
Tiruchendur

திருச்செந்தூர் கடல்நீர் உள்வாங்கியதால் கடலில் போடப்பட்ட பிண்ட சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்வதே வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

Nanthi

மாதந்தோறும் அஷ்டமி, நவமி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது வழக்கம். இந்த நாட்களில் கடல் நீர் உள்வாங்குவதும், சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அஷ்டமி நாளான இன்று கடல்நீர் மட்டம் குறைந்து காணப்பட்டது. கோவில்கள் மற்றும் வீடுகளில் குறைபாடுடைய பிண்ட சிலைகளை கடலில் கொண்டு போடுவது வழக்கம். கடல்நீர் 10 அடிக்கு மேல் உள்வாங்கியதால், கடலில் போடப்பட்ட பிண்ட சிலைகள் வெளியே தெரியகின்றன.


கடலில் தெரியும் பிண்ட சிலைகளை கோவிலுக்கு வரும் பக்கதர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். ஆங்காங்கே காணப்படும் சிலைகளை மீட்டெடுத்து காதுகாக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இதனை மீட்டு பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

From around the web