6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத்தேர்வு.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

 
school-dpi

தமிழ்நாட்டில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும், மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை பயிண்று வருகின்றனர்.

school

இந்த நிலையில் இந்த வருடம் சரியான தேதியில் பள்ளிகள் ஆரம்பித்திருப்பதால், முன்பிருந்தது போலவே பருவ தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பருவத்தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Exam

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12-ம் தேதி வரையும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் 12-ம் தேதி வரையிலும் முதல் பருவத் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

From around the web