ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்

 
TET

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப விபரங்களை, 'ஆன்லைனில்' திருத்தம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 26-ம் தேதி வரை வழங்கப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் 2-க்கு 4,01,886 என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

TET

மேலும், விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கைகள் தொடர்ந்து அலுவலகத்திற்கு பெறப்பட்டு வந்தது. விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 -க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 24-ம் தேதி முதல் வழிவகை செய்யப்பட்டது. விண்ணப்பதாரரின் அலைபேசி எண், இமெயில் முகவரி கல்வி தகுதியில் மாற்றம் செய்ய இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

TET

அதன்படி  ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தில்  திருத்தம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் ஜூலை 27ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம். அதாவது இன்றே  கடைசி நாள். மாற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு மேலும் மாற்றம் செய்யக்கூடாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

From around the web