ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் - தேர்வு வாரியம் அறிவிப்பு

 
TET

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும்.

TET

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 26-ம் தேதி வரை வழங்கப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் 2 -க்கு 4,01,886 என  6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

TET

மேலும், விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கைகள் தொடர்ந்து அலுவலகத்திற்கு பெறப்பட்டு வந்தது. விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 -க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் இன்று (ஜூலை 24) முதல் 27-ம் தேதிக்குள் திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதார்கள் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web