தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் திருவிழா - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Health-Festival-throughout-Tamil-Nadu

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ‘வருமுன் காப்போம்’ முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் வானகரம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ‘வருமுன் காப்போம்’ திட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் முதன்முதலாக வட்டார அளவில் நடைபெற்ற இந்த விழாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இதில் ஆங்கில மருத்துவம், சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவ முறைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஒன்றிய அரசு வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழாவை 12 நாட்கள் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதின்படி தமிழ்நாடு முழுவதும் 385 வட்டாரங்களில் இதனை நடத்தி திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

From around the web