டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி..!

 
Tamil-Nadu-Governor-RN-Ravi-leaves-for-Delhi

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்.

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்த பயணத்தில் ஆளுநர் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், அப்போது தமிழ்நாடு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பகோரிக்கை வலுத்துள்ள நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web