டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 
TNPSC

217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.

TNPSC

அந்த வகையில், உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்யூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 19 முதல் 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 29.01.2023 முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 12.30 வரை தாள்-1க்கான தேர்வும், பிற்பகல் 2.30 முதல் 5.30 வரை தாள்-2க்கான தேர்வும் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/stat%202022%20tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

From around the web