டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு... 1089 காலிப் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

 
TNPSC

நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.

TNPSC

அந்த வகையில் நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான 1089 காலிப் பணியிடங்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்றும் இவர்களுக்கு கணினி வழியாக வருகின்ற நவம்பர் 11-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2022 அன்று, 32-க்கு கீழ் இருக்க வேண்டும் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர் மற்றும் விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

TNPSC

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

From around the web