இந்து மக்கள் கட்சி பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!! தாய் உயிரிழப்பு!

 
IMK

கோவையில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (41). இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணி பிரிவு மாநில துணைத் தலைவராக இருக்கும் இவர், சென்னை பழைய வண்ணாரபேட்டை பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் கருப்பையா (45), என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காலி இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இருக்கும் தன் சொத்து தொடர்பான சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று கருப்பையா, வேண்டுகோள் விடுத்தார்.

IMK

அதற்கு, மாங்கல்ய பூஜை நடத்த வேண்டும் என்று ஜோதிடர் பிரசன்னா தெரிவித்துள்ளார். அதை நம்பிய கருப்பையா, பிரசன்னாவிடம் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார். மேலும், கருப்பையாவின் மனைவியின் 15 சவரன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியுள்ளார்.

கருப்பையாவிடம் இருந்து பணம், நகை என வாங்கிக்கொண்ட பிறகும் இடப் பிரச்சனையை பிரசன்னா தீர்த்து வைக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதையடுத்து, பிரசன்னாவிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்காததால், இதுகுறித்து கருப்பையா கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார், பிரசன்னா, அவர் மனைவி அஸ்வினி, ஹரி பிரசாத், பிரகாஷ் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிந்தனர்.

man-attempts-suicide

இதில் மனமுடைந்ததாக கூறப்படும் பிரசன்னா, அவரின் தாய் கிருஷ்ணகுமாரி, மனைவி அஸ்வினி, 8 வயது மகள் ஆகியோர், வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்து விட்டு நேற்று விஷம் குடித்தனர். இதையடுத்து அருகே இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் அவரது தாய் கிருஷ்ணகுமாரி உயிரிழந்தார். சிறுமி, பிரசன்னா, அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கோவை செல்வபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

From around the web