கோயம்பேட்டில் மளிகை பொருட்களின் விலை திடீர் உயர்வு!! பொதுமக்கள் அதிர்ச்சி

 
Koyambedu Koyambedu

சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் மளிகை பொருட்களின் விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் மக்களை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் உணவு தானிய வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா, மகராஷ்டிரா மாநிலங்கள், ஊட்டி, தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம், மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, வெந்தயம் போன்ற மளிகை பொருட்கள் தினமும் வருகின்றன. 

Koyambedu

இந்த நிலையில், ஜிஎஸ்டி உயர்வால், மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மிளகாய் ரூ.350-க்கும், தனியா ரூ.250-க்கும், மிளகு ரூ.550-க்கும், ஏலக்காய் ரூ.1,200-க்கும், லவங்கம் ரூ.750-க்கும், அண்ணாச்சி பூ ரூ.900-க்கும், முந்திரி ரூ.650-க்கும், பட்டை ரூ.300-க்கும், துவரம் பருப்பு ரூ.125-க்கும், சிறுபருப்பு ரூ.100-க்கும், கடலை பருப்பு ரூ.70-க்கும், உளுத்தம் பருப்பு ரூ.120-க்கும், கடுகு ரூ.80-க்கும், சீரகம் ரூ.280-க்கும், சோம்பு ரூ.150-க்கும், வெந்தயம் ரூ.100-க்கும், திராட்சை ரூ.250-க்கும் நெய் ரூ.230-க்கும் டால்டா ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Grains

இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய வியாபாரி ஒருவர் கூறுகையில், “கோயம்பேடு உணவுதானிய மார்க்கெட்டில் கடந்த இரண்டு மாதமாக மளிகை பொருட்கள் விலை கிடுகிடுவன உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைந்தால், மறுபடியும் மளிகை பொருட்கள் விலை குறையும்.” என கூறினார்.

From around the web