குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு... இருவர் பலி!

 
Courtalam

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரளாமான சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சுற்றுலா பயணிகள் 5 பேர் சிக்கி கொண்டனர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் ஒருவரை மீட்ட நிலையில் மற்ற 2 பேர் தடுப்புகளை பிடித்துக் கொண்டு வெள்ளத்திலிருந்து தப்பியுள்ளனர். இருந்த போதும், 2 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாறைகளில் முட்டி பலத்த காயமடைந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

Courtalam

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மேலும் யாரேனும் சிக்கி உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஆகாஷ், “தற்போது, குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அருவியல் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மல்லிகா, மற்றொருவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலாவதி என்றும் கூறப்படுகிறது. தற்போது, இந்த சம்பவம் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தேவையான இழப்பீடு ரூ.4 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

thenkasi

மேலும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் குற்றாலம் அருவிகளில் இதற்கு முன்பு இருந்த முதலுதவி சிகிச்சை மையம் தற்போது இல்லாத சூழலால் அவசர முதலுதவி கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. அது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து கனமனைழ பெய்து வருவதால் குற்றால அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே குற்றால அருவிகளான மெயின் அரவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் அதிகமான வெள்ளபெருக்கு ஏற்படுட்டுள்ளது. இதனால் இன்று அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை குற்றாலத்திற்கு வருகை தர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

From around the web